பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு !!

Read Time:1 Minute, 50 Second

ஜப்பான் நிதியமைச்சகத்தில் மூத்த அதிகாரியாகவும், நிர்வாக துணை மந்திரியாகவும் இருப்பவர் ஜுனிச்சி புகுடா. இவர் ஏராளமான பெண் நிருபர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பெண் நிருபர் ஒருவருடன் சமீபத்தில் மது அருந்திய அவர், பின்னர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக ஜப்பானின் ‘சின்சோ’ பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த விவகாரம் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் புகார்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த விவகாரம் பிரதமருக்கும், நிதி மந்திரி டரோ அசோவுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஜுனிச்சி புகுடாவை பதவிநீக்கம் செய்ய பிரதமர் ஷின்ஜோ அபே முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே தன் மீதான பாலியல் புகாரை மறுத்துள்ள ஜுனிச்சி புகுடா, தன்னைப்பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட அந்த பத்திரிகைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாக அறிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில் நிதி மந்திரி அசோவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு வருந்துவதாகவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வழக்கில் இருந்து விடுதலையான நடிகை !!
Next post ஜெயலலிதா மரணம், உண்மைகள் நிரூபணம் – சசிகலா தரப்பு தகவல்!! (உலக செய்தி)