ட்விட்டரில் இருந்து வெளியேறிய காயத்ரி..!!

Read Time:4 Minute, 3 Second

பலரும் தனக்கு எதிராகவே எப்போதும் கருத்து தெரிவிப்பதால், ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலானோர் சினிமாவுலகில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஆனால், காயத்ரி ரகுராமுக்குப் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதிலிருந்து அவரது செயல்பாடுகளைக் கவனித்துவரும் ரசிகர்கள் ஒவ்வொரு விஷயங்களையும் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த காயத்ரி “என்னை, ஜூலியை அல்லது யாரைக் கிண்டல் செய்தாலும் சரி; சமூக வலைதளங்கள் மூலம் கிண்டல் செய்வது, கெட்டவார்த்தை பயன்படுத்துவது போன்ற செயல்கள் முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால் நான் சைபர் க்ரைமில் புகார் அளித்து உங்களைக் கண்டுபிடிப்பேன். சத்தியமாகச் செய்வேன். அது தனி நபராக இருந்தாலும் சரி. இல்லை காசு கொடுத்துப் பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி” எனக் கோபத்துடன் பதிவிட்டிருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாகத் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோடியே திரும்பிப் போ என்கிற ஹேஸ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது. இதற்கு காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில்

“இதுபோன்ற ஹேஸ்டேக்குகளில் உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டாம். இது அவ்வளவு முக்கியம் இல்லை. காங்கிரஸ் கட்சி பணம் செலவழித்து இப்படி ஹேஷ்டேக்கை விலைக்கு வாங்கியுள்ளது. வேலையில்லாத மக்கள்தான் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய பிரச்சினைக்குப் பதிலாக இப்படி தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” எனக் குறிப்பிட்டார். இதனால் சமூக வலைதளத்தில் பல்வேறு வசைபாடுதலுக்கு காயத்ரி ஆளானார்.

இதையடுத்து சமீபத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக காயத்ரியை போலீஸார் கைது செய்துள்ளனர் என்ற ஒரு செய்தி வெளியானது. ஆனால் தான் கடந்த 25 நாள்களாக அமெரிக்காவில் இருப்பதாகவும், இது வதந்தி எனவும் கூறியிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இதைச் செய்கிறது எனவும் அவர் கூறினார்.

மேலும், “இனிமேல் எந்த ட்விட்டும் போட மாட்டேன். அதேபோல், எனக்கு ஆதரவு இல்லாதபோது, யாருக்கும் என்னுடைய ஆதரவும் இல்லை. இதுதான் என் கடைசி ட்விட். நான் ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணி நேரத்தில் கதவைப்பூட்டி கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்..!! (வீடியோ)
Next post அரங்கமே அதிர்ந்து போன தருணம்! எழுந்து நின்று கை தட்டிய நடுவர்கள்..!! (வீடியோ)