நிதி மோசடி செய்த மூவருக்கு 517 ஆண்டுகள் சிறை !!

Read Time:2 Minute, 32 Second

கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். இவரது மனைவி வாலனி. இவர்களுடன் ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து டுபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை முதலீடு செய்து வந்தால் 120 சதவீதம் லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்தனர்.

அவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் இதில் அடங்குவார்கள். முதலில் சொன்னபடி குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனம் திருப்பி தந்தது. அதன்பின்னர், நாளடைவில் அவர்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீடு செய்தவர்கள், தங்களது பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் அந்த நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, லிமோஸ், ரியான் டிசோசா உள்பட 3 பேர் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் டுபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிபதி, நிதி நிறுவனத்தின் உரிமையாளரான லிமோஸ், வாலனி மற்றும் டிசோசாவிற்கு 517 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே, 2015 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த கால்பந்து போட்டியில் முக்கிய விளம்பரதாரராக லிமோஸின் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரும் புள்ளிகள் – நாட்டையே அதிரவைத்த ஆஷிபா!!
Next post மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..?( அவ்வப்போது கிளாமர் )