காஷ்மீர் சூழ்நிலை கவலை அளிக்கிறது : ஐநா பொதுச்செயலாளர் கருத்து!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 40 Second

காஷ்மீர் மாநில சூழ்நிலை கவலை அளிப்பதாக ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக் நேற்று முன்தினம் அளித்த பேட்டி: காஷ்மீர் மாநிலத்தின் சூழல் குறித்து ஐநா பொதுச்செயலாளர் தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறார். பொதுமக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை நினைவுப்படுத்துகிறேன்.

காஷ்மீர் மாநில சூழ்நிலை குறித்து இந்திய அதிகாரிகளிடம் ஆன்டனியோ பேசியுள்ளார். வேறுபாடுகள் உள்ள எந்த பிரச்னையிலும் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஐநா ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்பது கொள்கை விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், இரு தரப்பை சார்ந்தவர்களும் கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர்களுக்காக ஐநா உதவி செய்யும். இதை நான் காஷ்மீர் பிரச்னைக்காக என்று மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இருப்பினும், காஷ்மீர் சூழ்நிலையை ஐநா தொடர்ந்து மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மினரல் வாட்டரில் மினரலே இல்லை! கேன் வாட்ட-ரில் வைரஸ்தான் உள்ளது!(மருத்துவம்)
Next post ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை : பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை!!(உலக செய்தி)