ஷூட்டிங் இல்லாததால் கிராமத்தில் பொழுதை கழிக்கும் ஹீரோயின் !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 1 Second

திரையுலகில் வேலை நிறுத்தம் நடப்பதால் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் ஓய்வாக இருக்கின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி பலர் வெளிநாடுக்கு ஜாலி டூர் கிளம்பி விட்டனர். அவர்களில் நடிகை பிந்துமாதவி வித்தியாசமாக யோசித்திருக்கிறார். இவர் தனது சொந்த கிராமத்துக்கு சென்று வயல்வெளியில் சுற்றி பொழுதை கழிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஆந்திராவில் தேவரிநிதிபள்ளி கிராமம் தான் எனது சொந்த ஊர்.

ஐதராபாத்திலிருந்து 7 மணி நேர பயணத்தில் எங்கள் ஊரை அடையலாம். தற்போது படப் பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் கடந்த 1 மாதமாக இந்த கிராமத்தில்தான் பொழுதை கழித்து வருகிறேன். சிறுவயது நினைவுகளோடு வயல்வெளி, மலைப்பகுதி, கம்மாய் என தோழிகளுடன் இயற்கையோடு இயற்கையாக ஒன்றிவிட்டேன். நீச்சல் குளத்தில் நான் நீச்சல் கற்கவில்லை.

எங்கள் ஊரில் உள்ள கம்மாயில்தான் சிறுவயதில் நீச்சல் கற்றுக்கொண்டேன். கேஸ் அடுப்பை மறந்து வீட்டில் விறகு மூட்டி சமையல் செய்தேன். வயல் வெளிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று மேய்த்தேன். நான் படித்த பள்ளிக்கு சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் பொழுதை கழித்தேன். வாழ்நாளில் இதை மறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் நான் கிராமத்துக்கு வந்து குடும்பத்தினருடன் நேரம் செலவிட தவறுவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபருக்கு எதிராக பேரணி!!(உலக செய்தி)
Next post இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை!!(சினிமா செய்தி)