காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 2,25,000 ஆணுறைகள் தயார்!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 23 Second

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் பங்கேற்க உள்ள சுமார் 6,000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 11 நாட்கள் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் நாளொன்றுக்கு 3 ஆணுறை பயன்படுத்தும் விதமாக மொத்தம் 34 ஆணுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டன.

இதேபோல் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்றவர்களுக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனி உணவுக்கூடம் அமைப்பு
இதுதவிர காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்காக தனி உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 300 சமையல் காரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 24 மணிநேரமும் இந்த உணவுக்கூடம் செயல்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை!!(சினிமா செய்தி)
Next post ரூ.100 கோடி வசூலித்துள்ள ரங்கஸ்தலம்!!(சினிமா செய்தி)