நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ஸ்ரேயா!!

Read Time:2 Minute, 41 Second

ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. முன்னணி ஹீரோயின்கள் ரேஸில் ஓடிக்கொண்டிருந்தவருக்கு திடீரென்று சுணக்கம் ஏற்பட்டது. மார்க்கெட் டல்லடித்து வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. கடந்த 3 வருடமாகவே அவரை கோலிவுட் பக்கம் அடிக்கடி காண முடியவில்லை. அப்படியே நடித்தாலும் கெஸ்ட் ரோல், தோல்வி படம் என்ற அளவில்தான் பேசப்பட்டு வந்தார். பொறுமையாக காத்திருந்த ஸ்ரேயாவுக்கு திடீர் வாய்ப்பாக அரவிந்த்சாமியுடன், ‘நரகாசூரன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதைவைத்து திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில் அப்படம் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. பட இயக்குனர் கார்த்திக் நரேன், தயாரிப்பாளர்களில் ஒருவரான கவுதம் மேனன் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பிரச்னை எப்போது தீருமோ என்ற கவலையும் ஸ்ரேயாவுக்கு சேர்த்து வாட்டியது. 35 வயதாகிவிட்ட ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் எண்ணினர்.

அதற்கு சம்மதிக்காமலிருந்தவர் திடீரென்று தனக்கு ரஷ்ய காதலன் இருப்பதாக தகவல்களை கசிய விட்டார். கடந்த மாதம் ரகசியமாக காதலன் ஆண்ட்ரேவ் கோஷ்சேவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இல்லறத்தில் மூழ்கிவிட்ட ஸ்ரேயா தற்போது நடிப்பிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறார். காதலனுடன் ரஷ்யா சென்று வாழ முடிவெடுத்திருக்கும் அவர் தெலுங்கில் வெங்கேடஷுடன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. பட வாய்ப்பு இல்லாத நிலை தொடரும் பட்சத்தில் அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்றும் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!! (மருத்துவம்)
Next post உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!!(அவ்வப்போது கிளாமர் )