கவர்ச்சியாக நடிக்க வெட்கப்பட மாட்டேன் : சமந்தா அதிரடி!!

Read Time:2 Minute, 16 Second

சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி, திருமணத்துக்கு பிறகு இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்துகின்றனர். சமந்தா தொடர்ந்து நடிக்க சைதன்யாவோ அவரது குடும்பத்தினரோ தடை விதிக்கவில்லை. திருமணத்துக்கு முன்பு கிளாமர் ஹீரோயின் வேடங்களில் நடித்ததுபோல் இப்போதும் அதுபோன்ற வேடங்களை ஏற்கிறார். அதேசமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கிளாமர் குறைந்த கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.

இதுபற்றி சமந்தா கூறியது: கமர்ஷியல் மசாலா படங்களில் கிளாமர் ஹீரோயினாக நடித்துவந்த நான் திடீரென்று அதிலிருந்து விலக விரும்பவில்லை. அது எனது நடிப்பு தொழிலை பாதிக்கும். அதை நான் உணர்ந்திருக்கிறேன். கிளாமர் ஹீரோயினாக எல்லா நடிகைகளுக்கும் ரசிகர்களின் அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதை இழக்கவிரும்பவில்லை. கிளாமர் வேடங்களில் நடிக்க நான் வெட்கப்பட்டு ஒதுங்க மாட்டேன்.

அதேசமயம் அதில் மாறுபட்ட நடிப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்’ என்றார். சமந்தா தற்போது தெலுங்கில் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்திருக்கிறார். அதற்கு ஏக வரவேற்பு கிடைத்திருப்பதால் தொடர்ந்து அதேபோன்ற வேடங்களில் நடிப்பார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாகவே கிளாமர் ஹீரோயினாக தொடர்ந்து நடிப்பேன் என அவர் தெரிவித்திக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் போராட்டம்!!
Next post வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்)