உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் போக்ரியாலின் மகள் ராணுவத்தில் சேர்ந்தார்!!

Read Time:2 Minute, 13 Second

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜ எம்பி.யுமான ரமேஷ் போக்ரியாலின் மகள் ஷிரேயாசி ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களின் வாரிசுகளும் ராணுவத்தில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டியது கட்டாயம். ஆனால், இந்தியாவில் அதுபோன்று இல்லை. இந்நிலையில், உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜ எம்பி.யுமான. ரமேஷ் போக்ரியாலின் மகள் ஷிரேயாசி ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவர் டாக்டருக்கு படித்தவர்.

ஷிரேயாசி டாக்டருக்கு படித்து முடித்ததும் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பல்வேறு வேலைவாய்ப்புகள் வந்துள்ளன. கைநிறைய சம்பளம் கொடுத்து மருத்துவமனைகள் இவரை வேலைக்கு அழைத்தும், அதை மறுத்துள்ளார். காரணம், இவருக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தனியாத ஆர்வம் இருந்ததுதான்.

இதனால்தான், டாக்டருக்கு படித்து முடித்திருந்தாலும், ராணுவத்தில் சேரப்போவதாக தந்தையிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன்படி ராணுவ தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். இந்நிலையில், அவரது கனவு நிறைவேறி உள்ளது.ராணுவ தேர்வில் வெற்றி பெற்று, அதன் மருத்துவப் பிரிவுக்கு தேர்வாகி உள்ளார். ரூர்கி பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமணையில் இன்று முதல் அவர் பணியில் சேர உள்ளார். தனது மகளின் ராணுவப்பணி கனவு நிறைவேறியது, தனக்கும் பெரும் பெருமை என்று அவரது தந்தை போக்ரியால் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்திகேயனை அதிரவைத்த நவீன் மிமீக்ரி!!(வீடியோ)
Next post சிரிப்பு மழை Part 3, சிரிப்பு நிச்சயம் !!(வீடியோ)