ராஜா இசையை வெளியிட்ட ரஹ்மான்! மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

Read Time:3 Minute, 23 Second

மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு நேற்று நடந்த வெங்கட் பிரபுவின் சரோஜா திரை இசை வெளியீட்டு விழா ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த சரோஜா திரைப்படத்தின் ஆடியோ சிடியை வெளிட்டவர் யார் தெரியுமா… சாட்சாத் நம் ‘மெட்ராஸ் மொசார்ட்’ ரஹ்மான்தான்! சிடியை வெளியிட்டது மட்டுமல்ல, விழாவுக்கு வந்திருந்த மொத்த விஐபிக்களுக்கும் தானாகவே அவர்களிருக்கும் இடத்துக்குப் போய் சிடிக்களைக் கொடுத்தவரும் ரஹ்மான்தான். பின்னர் மைக்கப் பிடித்தவர், நான் 23 வருடங்களுக்கு முன்பு இளையராஜாவிடம் கீ போர்டு வாசிப்பவராகச் சேர்ந்தேன். அப்போது வீட்டின் ஒரு மூலையிருந்து அங்கிள்… என்று ஒரு சிறுவன் குரல் கொடுப்பான் அடிக்கடி. அந்த சிறுவன்தான் இன்று யுவன் ஷங்கர் ராஜா எனும் பிரமாண்ட இசைக் கலைஞராய் வளர்ந்து நிற்கிறார். பெருமையாக இருக்கிறது. இளையராஜா என்ற மாபெரும் இசை மேதையின் குடும்பத்திலிருந்து வந்த யுவன், தன் சுய முயற்சியால் யாரையும் பின்பற்றாமல் புது பாணியில் இசையமைக்கிறார். அருமையாகச் செய்கிறார். வாழ்த்துக்கள், என ரஹ்மான் வாழ்த்த அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது. விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் பாரதிராஜா, ரஹ்மானின் இந்த வாழ்த்துரையிலும், அவர் நடந்து கொண்ட விதத்திலும் நெகிழ்ந்து போய் பாராட்டினார். இதுதான்யா நம்ம பண்பாடு. நீ எப்பவும் நம்மாளுய்யா… அதை ஒவ்வொரு முறையும் நிரூபிச்சிட்டே… என்றார் ரஹ்மானிடம். சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜா தனது திருவாசகம் ஆரட்டோரியோ அறிமுக விழாவுக்கு ரஹ்மானை அழைத்திருந்தார். மிகச் சரியான நேரத்துக்கு விழாவுக்கு வந்த ரஹ்மான், ராஜாவின் இசையைக் கேட்டு மிகவும் சிலிர்த்துப்போய் ஒரு மோதிரத்தை ராஜாவின் கையில் அணிவித்தது நினைவிருக்கலாம். கலைஞர்கள் உணர்வாலும், இசையாலும் எப்போதும் ஒரே மாதிரியிருக்க, அவர்களது ரசிகர்கள் மட்டும் பிரிவினையில் அடித்துக் கொள்வது எத்தனை சிறுபிள்ளைத்தனமானது என்பதை நிரூபித்த இன்னொரு நிகழ்ச்சிதான் சரோஜா இசைவிழா. வெல்டன் ரஹ்மான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் தகர்ப்பு – 9 அமெரிக்க வீரர்கள் பலி
Next post வெனிசுலாவில் கொண்டாட்டம்