“இத்தாலியில் அடுத்த ஜி-8 மாநாடு: பருவநிலை மாற்றம் முக்கியத்துவம் பெறும்’

Read Time:1 Minute, 40 Second

இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கான யோசனை மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவை முக்கியத்துவம் பெறும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் கடந்த புதன்கிழமை முடிந்த ஜி-8 மாநாடு குறித்து கனடாவைச் சேர்ந்த “ஜி-8 மாநாட்டு ஆய்வுக் குழு’ இத்தகவலை தெரிவித்துள்ளது. இக்குழுவைச் சேர்ந்த ஜான் கிர்டன், ஜி-8 மாநாட்டு முடிவுகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். மாநாடு முடிந்த நிலையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: “செல்வந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்வதற்கு தயாராகிவிட்டன. 2050க்குள் ஓசோன் படலத்தை பாதிக்கும் கரியமிலவாயு வெளியேற்றத்தை 50 சதவீதமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரப்படுத்தும்’ என்றார் அவர். பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் ஜப்பான், ஜி-8 நாடுகளின் சிறந்த தலைவராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனிஷ்கா விமான விபத்து: எஞ்சிய ஒரு குற்றவாளியும் ஜாமீனில் விடுதலை
Next post பிரிட்டனில் இளம் வயதில் டாக்டரான இந்தியப் பெண்