கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!!

Read Time:5 Minute, 15 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். செம்பருத்தியை கொண்டு நீர் இழப்பை சமன் செய்து உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: செம்பருத்தி இதழ்களை எடுக்கவும்.

இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதய நோய் இல்லாமல் போகும். பருத்தி இனத்தை சேர்ந்த செம்பருத்தி பல்வேறு நன்மைகளை கொண்டது. இதில் இரும்புச்சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது.

வெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஊறவைத்த வெந்தயத்தை நீருடன் எடுக்கவும். இதனுடன் சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர ஆசனவாய், சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும். உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்புச்சத்தை கொண்டது.

சிறுநீர் பெருக்கியாக சோம்பு விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது. திருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திருநீற்றுப்பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு. செய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.

நோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். திருநீற்று பச்சையை காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணத்தை கொண்டது. விதைகள் மிகுந்த குளிர்ச்சி தரக்கூடியது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

இது, பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம். தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கும். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும். வியர்குருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்க ‘அருவி’ நடிகை அதிதியுடன் கதை கேட்கும் பெற்றோர்(சினிமா செய்தி) !!
Next post முதியோருக்கான சிறப்பு உணவுமுறை(மருத்துவம்)!!