மனசுக்கும் தேவை டீட்டாக்ஸ்(மருத்துவம்)..!!

Read Time:6 Minute, 58 Second

மாத்தி யோசி

நம் உடல் ஆரோக்கியத்துக்கு சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்வதன் அவசியத்தைப் போலவே, உடலில் சேர்கிற நச்சுக்களை குறிப்பிட்ட இடைவெளியில் நீக்குவதும் அவசியம். குளிப்பது, பல் துலக்குவது, மலம் மற்றும் சிறுநீர் கழிப்பது, போதுமான வியர்வை வெளியேறுவது என்று பல்வேறு செயல்களின் மூலம் நம் உடலின் கழிவுகள் வெளியேறுகின்றன.

இதுபோல் அன்றாட செயல்கள் தவிரவும் இன்னும் நுட்பமான நச்சுக்கழிவு நீக்கம் பற்றி மருத்துவர்கள் பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறார்கள். இதன் காரணமாக, Detox என்ற பெயரும் பிரபலமாகிவிட்டது. இதெல்லாம் உடலுக்கு சரி..மனதுக்கும் இதுபோல் டீட்டாக்ஸ் செய்ய முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் சங்கீதா.

‘‘உங்களுடைய அன்றாட செயல்பாடுகளையும், பொருளாதார ஈட்டுதலுக்கான பணிகளையும், தூக்கத்தையும் பாதிக்கும் அளவு உங்கள் மனநிலை இருக்கும்போது உங்கள் மனநிலை சரியில்லை என்று அர்த்தம் அந்த மனதை ஆரோக்கியமானதாக மாற்றுவது அவசியம்.

மூளையின் பல்வேறு செயல்பாடுகளின் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதை Pineal gland என்கிறோம். மனம் என்பது புலன் உறுப்புகள் மூலம் பல தகவல்களைப் பெட்டகமாக மூளையில் பதிகிறது. இது அனுபவமாக மாறுகிறது. இதன்படி நம்முடைய நடவடிக்கைகளாகவும் அமைகிறது. இது ஒவ்வொருவருக்கு மாறுபடும்.

நம்முடைய மனம் உணர்ச்சிகளால் ஆனது, ஒவ்வொரு உணர்ச்சிகளால் நம் உடல் நன்மை அடைகிறது. பய உணர்வு பாதுகாப்பாதற்கும், கோபம் தன்னை சரியாக வெளிப்படுத்துவதற்கும், கவலை தன்னை பக்குவப்படுத்திக் கொள்வதற்கும், மகிழ்ச்சி கூடி வாழும் தன்மையை பெறுவதற்கும், மனநிறைவோடு வாழ்வதற்கும் தேவையாக இருக்கிறது. இந்த உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்போதுதான் மனம் சுத்தமாக இருக்கிறது’’ என்பவர், மனதை சுத்தப்படுத்துவது இப்படிதான் என்று சில வழிமுறைகளைச் சொல்கிறார்.

‘‘அவ்வப்போது உங்களை நீங்களே உள ஆய்வு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய குறிக்கோள், உங்களுடைய பலம், பலவீனம் போன்றவற்றை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு இருக்கிற வாய்ப்பு அதை பயன்படுத்தி இலக்கை அடைவதற்கான திட்டம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.சில செயல்களால் தவறுகள் விளையும்போது அதனை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். முதலில் உங்களை நீங்களே மன்னிக்க வேண்டும், பிறகு மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த செயலையும் மன்னித்து கடக்கும்போதுதான் அது உங்கள் மனதில் தங்காமல் இருக்கும்.

உங்களுடைய எந்த செயல்பாடும் உங்களுடைய தூக்கத்தை கெடுக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்துக்குத் தூங்கி அதிகாலையில் எழுந்திருக்க பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். தினமும் தியானம் செய்வதன் மூலம் உங்களுடைய மனம் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ளுங்கள். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பொழுதுபோக்கு
அம்சங்களில் ஈடுபடுங்கள்.

உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புங்கள். மது மற்றும் புகை போன்ற போதை வஸ்து களிடமிருந்து விலகி இருங்கள். உங்களுடைய அன்றாட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள், உங்களை சார்ந்தவர்களோடு பழகும்போது அவர்களிடமிருந்து நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை உற்சாகப்படுத்தும் உங்கள் மீது அக்கறை உள்ளவர்களிடம் அதிகம் பழகுங்கள். பதற்றமடைவதை எப்போதும் தவிருங்கள், யார் மீதும் எது குறித்தும் எப்போதும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பது கூடாது.

நடந்து முடிந்ததை உங்களால் மாற்ற முடியாது. அதனால், அவற்றை நினைத்து அவசியமில்லாமல் கவலைப்படும் குணத்தை மாற்றுங்கள். கசப்பான பழைய சம்பவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதேபோல், நடக்கப்போவதையும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அதை உங்களால் திட்டமிட முடியும். முக்கியமாக, எப்போதும் நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொள்ளுங்கள். உங்களுடைய நிகழ்கால செயல்பாடுகள்தான் இறந்த காலமாகவும் எதிர்காலமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தற்போது இருக்கிற டிவி, இணையம், மொபைல் போன்றவற்றின் காரணத்தால் ஒவ்வொருவரும் தூங்கும் நேரம் தள்ளிப்போகிறது. இது உங்களின் உடலையும் மனத்தையும் கெடுக்கும். அதனால் இதன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள். மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுங்கள். முக்கியமாக நல்ல புத்தகங்களை வாசியுங்கள். இயற்கையுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். இவையெல்லாம்தான் மனசுக்கு டீட்டாக்ஸ்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழி சாய்ஸ்( மகளிர் பக்கம்)!!
Next post வானவில் சந்தை(மகளிர் பக்கம்)..!