சுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்(அவ்வப்போது கிளாமர் )?

Read Time:2 Minute, 1 Second

பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளியேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமான சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது.

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்பொழுது இரத்தஓட்டம் அதிகமாகி, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது, ஆண்குறி முனையில் அழுத்தம் ஏற்பட்டு, நரம்புகளில் இன்பத்துடிபபு ஏற்படுகிறது. இதுவே உச்ச இன்பம் என்பதாகும். பிறகு, உடல் சாதாரண நிலைக்கு வருகிறது.

இப்பொழுது ஏற்படும் உடல் தளர்ச்சியும், மன அமைதியும், ஒருவிதக் களைப்பு உணர்வைக் கொடுக்கிறது. தூக்க உணர்வை ஏற்படுத்துகிறது. இதுவரை ஆட்டிப் படைத்த பாலுணர்வுக் கற்பனைகள் தற்காலிகமாக மறைகிறது.

இந்த உடல் சோர்வு, நீங்கள் சாதாரணமாக விளையாடி விட்டு வந்தபிறகு ஏற்படும் உடல் சோர்வு போலத்தான். இதில் ஏற்படும் சக்தி விரயம், விளையாட்டில் ஏற்படும் சக்தி விரயத்தை விட குறைவுதான். ஆனால், பெரும்பாலோர் குற்ற உணர்வினால் மனச்சோர்வு அடைந்து, அதன் மூலமாக உடல் சோர்வை அடைகிறார்கள், அவ்வளவுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்க வைப்பதும் நானே… தூக்கம் கெடுப்பதும் நானே(மருத்துவம் )…!!
Next post லிபியாவிடம் 45 கோடி வாங்கியதாக புகார்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி கைது(உலக செய்தி)!!