கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க(அவ்வப்போது கிளாமர்)…!!!!

Read Time:5 Minute, 58 Second

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவம் ஆகும் நேரம் இது!(மருத்துவம்)
Next post பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)