காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:8 Minute, 35 Second

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்.

மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.

ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொரு ளாகக் கருதப்படுகிறது. ஒயினா னது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது. முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மை யான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்.

ரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.

ஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ (வெண்ணைய் பழம்). இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்.

பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்ட மின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண் ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை.

அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.

இனிமையான மணமுடைய மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.

மிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் கேப்சைசினானது, உடலில் எண்டோர்ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

முக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை. இதனால் இவற்றை, தாராளமாக உண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்ப்பை சூறையாடிய இந்திய ராணுவம்!!(வீடியோ)
Next post நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 18 பேர் பலி!!(உலக செய்தி)