மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..?( அவ்வப்போது கிளாமர் )

Read Time:3 Minute, 24 Second

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்துப் பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்து தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் body இமேஜ் என்ற சொல்கிறோம். அதாவது நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. உண்மையைச் சொல்வது என்றால் பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறியதாக அல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின் மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்.

பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதாகிக் கொள்கிறார்களே? என்ற கேள்வி எழுலாம். நடிகைகளுக்குக் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினிமாவின் காட்சி தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது. அதையே ஒரு சாதாரண பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலைதான் ஏற்படுகிறது. அதனால் தன உடல் இன்பமயமானது என்றும் இதை வைத்து ஆண்களுக்குத் தேவையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் உருதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெண்களிடம் ஆண்களைக் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள். செக்ஸ் ஆசையை எதிராளிக்குத் தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிதி மோசடி செய்த மூவருக்கு 517 ஆண்டுகள் சிறை !!
Next post துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!!( அவ்வப்போது கிளாமர் )