அமெரிக்காவில் குடியேற்றம் நிறைவடையும் வரை மாற்றுத் திட்டங்கள் எதுவும் கிடையாது(உலக செய்தி)!!

Read Time:3 Minute, 25 Second

அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த இரு மாதங்களாக அகதிகளை மீள்குடியமர்த்தும பணி நடைபெற்ற வருகின்றது. இதுவரை சுமார் 200 அகதிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதிச் செய்துள்ளார். இந்த அகதிகள் ஆஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டவர்களாவர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ளமத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாககையெழுத்தானது.

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியேஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் படகு வழியே வந்த சுமார்2000 அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவு தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அமெரிக்கா இன்னும் 1000 அகதிகளை மீள்குடியமர்த்த வேண்டி இருக்கிறது.

இதைத் தவிர்த்து, இன்னும் மீதமுள்ள சுமார் 1000 அகதிகளுக்கான மாற்றுத்திட்டத்தை இப்பொழுதே நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆண்டுக்கு 150 அகதிகளை எடுத்துக் கொள்வதாக நியூசிலாந்து அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்ற சூழலிலும் அதனை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றது. அமெரிக்கா முழுமையான மீள்குடியமர்த்தல் பணியை நிறைவுச் செய்த பின்னரே மாற்று திட்டங்கள் குறித்து பேச முடியும் என்பதை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்(அவ்வப்போது கிளாமர்)…!!
Next post ஸ்ரீதேவிக்கு காபியில் அஞ்சலி! (வீடியோ)