கவர்ச்சியில் குதித்த நந்திதா; வைரலாகும் படங்கள்(சினிமா செய்தி)!!

Read Time:2 Minute, 1 Second

அட்டகத்தி என்ற படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர் நீச்சல், புலி போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகை நந்திதா. ஆனால், தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவிர்த்து வந்தார். நீங்க நெனச்சது கரெக்ட் பாஸ்..! தமிழில் வாய்ப்பு இல்லை என்றதும் எல்லா நடிகைகள் மாதிரியே நந்திதாவும் தெலுங்கு படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார்.

இந்நிலையில், தெலுங்கு மொழியில் உருவான “எக்கடக்கி போத்தாவு சின்னவாடா” என்ற பேய் படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் நந்திதா-வுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிதின் கதாநாயகனாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அம்மணி இந்த படத்தில் முதன் முறையாக இது வரை இல்லாத கவர்ச்சியான வேடமேற்று நடிக்கவுள்ளாரம்.

இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நந்திதா இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார் என கூறுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்பே நலம்தானா(மருத்துவம் )?!
Next post தூக்கமின்மையை போக்கும் மல்லிகை(மருத்துவம் )!!