மாஸ்டர் பிளான் 2021 திருத்தம்: உச்ச நீதிமன்ற தடை உத்தரவுக்கு குடியிருப்பு நல சங்கங்கள் வரவேற்பு: வியாபாரிகள் கலக்கம்!!

Read Time:3 Minute, 8 Second

மாஸ்டர் பிளான் 2021ல் திட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை குடியிருப்போர் நலச்சங்கங்கள் வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரையின் பேரில் தலைநகரில் மாற்று கட்டணம் செலுத்த தவறிய நிறுவனங்கள் மற்றும் டெல்லி மாஸ்டர் பிளான்(எம்பிடி) 2021 திட்டத்திக்கு எதிராக உள்ள வணிக வளாகங்கள், கடைகளை சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வியாபாரிகளிடையே எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து,வியாபாரிகளுக்கு உதவும் வகையில், எம்பிடி 2021 திட்டத்தில், திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வந்தது.

இதற்கான பணிகளை டெல்லி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வந்த நிலையில், ‘மாஸ்டர் பிளான் திட்டத்தில் திருத்தங்கள் செய்யும் முன்பாக அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் இதர பாதுகாப்பு பிரச்னைகளை ஆய்வு செய்யபட்டதா? என கேள்வி எழுப்பியதோடு, மாநில அரசு, டிடிஏ மற்றும் மாநகராட்சிகளை கண்டித்த உச்ச நீதிமன்றம் எம்பிடி 2021 திருத்தத்துக்கு தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு குடியிருப்பு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே கடை மற்றும் நிறுவனங்கள் உறுவாகுவதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய வர்த்தர கூட்டமைப்பின் பொது செயலர் பிரவீன் கந்தேவால் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மேலும் பிரச்னையை பெரிதாக்கியுள்ளது. இதானால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, வர்த்தகர்களின் ஸ்திரத்தன்மையும் சீர்குலைகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச காத்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் புரி, துணைநிலை ஆளுநர் பைஜால் மற்றும் மாநில முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்து எங்களது கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எஸ்எஸ்சி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தை தொடர: ஆம் ஆத்மி மாணவர்களை தூண்டிவிடுகிறது!!
Next post நீரில் மூழ்கி வெளிநாட்டவர் பலி!!