பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஸ்ரேயா லிப் டு லிப் முத்தம் நிஜம்தான்! – ஸ்ரேயா
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஸ்ரேயா லிப் டு லிப் முத்தம் கொடுத்த விவகாரம்தான் படுசூடாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்போதைக்கு. இதுகுறித்து ஸ்ரேயாவைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார். முத்தக் காட்சிகளுக்கு நான் எதிரி இல்லை. படத்தில் அப்படி ஒரு காட்சியிருந்தது. நடித்தேன். திரையில்தான் நான் ஹாட். நிஜத்தில் பாரம்பரியமான சாதுப் பெண் நான். இம்ரானுக்கு படத்தில் கொடுத்த முத்தத்தை நிஜத்தில் முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்! இந்திப் படங்களில் மிகக் கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே… கவர்ச்சிக்கு அளவுகோல் கிடையாது. சிவாஜியிலேயே நான் கவர்ச்சியாகத் தோன்றியதாகத்தான் சொன்னார்கள். இன்னொரு பக்கம், என்னோட உடல்வாகுக்கு பிகினிதான் நல்லாருக்குன்னு என் ரசிகர்கள் சொல்றாங்க. அதனாலதான் மேக்ஸிம் பத்திரிகைக்கு மேக்ஸிமம் கவர்ச்சியோட போஸ் கொடுத்தேன். பாராட்டு குவிஞ்சிடுச்சி, என்கிறார் ஸ்ரேயா. அப்ப இனி படங்களிலும் பிகினி தரிசனம் உண்டா?… ஏன் இல்லாம… டைரக்டர்கள் சொன்னால் நிச்சயம் நீச்சல் உடையில் தோன்றுவேன். வரப் போகிற கந்தசாமியில்கூட அப்படியொரு காட்சி இருக்கு, எனும் ஸ்ரேயாவுக்கு ரோபோவில் வாய்ப்புக் கிடைக்காதது பெரும் வருத்தமாம். ரஜினி சார் கூட திரும்பவும் இணையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவருடன் நடித்த போது, என்னைவிட இருமடங்கு வயதுள்ள ஹீரோவுடன் நடிக்கும் உணர்வே எனக்கு இல்லை. அத்தனை இளமையுடன் அசத்தினார் ரஜினி, என ரஜினி புகழ் பாடுகிறார் நயன்தாராவுக்குப் போட்டியாக. சரி, மர்மயோகியில் நடிப்பது உறுதியாகிவிட்டதா.? அதுபத்தி இப்போது எதையும் சொல்ல முடியாத நிலையிலிருக்கேன். கமல் சார் பேசியிருக்கார். இன்னும் சில தினங்கள் கழித்து எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் தகவல் சொல்கிறேன். நல்லபடியா ‘முடியட்டும்’…!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating