பலமொழி பேசி நடிகர்களை கவரும் ஹீரோயின்!!

Read Time:1 Minute, 52 Second

ஹீரோ, ஹீரோயின்கள் நடிப்பை தவிர பாட்டு பாடுவது, ஓவியம் வரைதல், விளையாட்டு போன்றவற்றில் தங்களது திறமைகளை அவ்வப்போது வெளிக்காட்டுகின்றனர். தமிழில் சாஹோ படம் மூலம் பிரபாஸ் ஜோடியாக அறிமுக மாகிறார் ஷ்ரத்தா கபூர். வழக்கு மொழிகளை உடனே கிரகித்துக்கொண்டு பேசும் ஆற்றல் இவருக்கு உண்டு. சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றவர் வட்டார மொழிகளை சரளமாக பேசும் காட்சியில் நடிக்க வேண்டி வந்தது.

அப்போது ஷ்ரத்தா கபூர், தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கான வட்டார வழக்கு மொழியை ஒன்றிரண்டுமுறை உன்னிப்பாக எப்படி பேசுகிறார்கள் என்பதை கவனித்து உடனே பேச ஆரம்பித்தார். அதற்கு பட குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். இதில் குஷியான ஷ்ரத்தா, ‘இதையும் கேளுங்கள்’ என்றபடி அமெரிக்கன், ரஷ்யன், பிரிட்டிஷ், பிரெஞ்ச் என பல்வேறு நாடுகளின் வழக்கு மொழியை சரளமாக பேசி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் படக் குழுவினரையும் கவர்ந்தார். அவரது திறமையை கண்டு கைதட்டி பாராட்டினார்கள்.

இதுபற்றி ஷ்ரத்தா கூறும்போது,’இதுபோல் சரளமாக வட்டார வழக்கு பேசுவதற்கு நேர்மையான பயிற்சி மிக முக்கியம். வட்டார வழக்கை அச்சு அசலாக பேசுவதென்பது சவாலான விஷயம்தான்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
Next post வெற்றிமாறன் வெளியிடும் படம்!!