புலிகள் அமைப்பிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பிரபாகரனும், பொட்டுவுமே காரணம் -கருணாஅம்மான்

Read Time:2 Minute, 21 Second

மனித உரிமை மீறல்களினை மேற்கொண்டதாகத் தெரிவித்து என் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுவது வேடிக்கையான விடயம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து இலங்கை திரும்பியதும் லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் அதன் இராணுவத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாகவும் அதன்போது பல தாக்குதல் நடவடிக்கையினை தான் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள கருணா எனினும் அந்தக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் விசாரணை செய்ய வேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக பிரித்தானியா சென்றதாகவும் அங்கு தங்கியிருக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டியப பல கடமைகள் தன்னிடம் உள்ளதாகவும் எனவே சுயவிருப்பின்பேரில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விரைவில் கருணா அம்மானை தான் சந்திக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் எனத் தெரிவித்துள்ள அவர் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான சிக்கலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார் நளவன்வாடி மூர்வீதிபகுதியில் படையினர் சுற்றிவளைப்பு
Next post அமெரிக்காவில் ஆணுக்கு குழந்தை பிறந்தது