வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் குவைத் அரசு நீட்டிப்பு!!

Read Time:1 Minute, 48 Second

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் சம்பள பிரச்னை போன்ற காரணங்களால் பணிக்கான விசா காலம் முடிந்த பிறகும் சட்ட விரோதமாக அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி குவைத் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி, சட்ட விரோதமாக குவைத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து எந்த அபராதமும் இல்லாமல் பொது மன்னிப்பு பெற்று சொந்த நாடுகள் திரும்பி செல்லலாம் என்று தெரிவித்தது.

இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை என்று வெளிநாட்டு தொழிலாளர்களும், அவர்களின் நிறுவனங்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையேற்றுக் கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஷேக் அலி முகமது, கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்த பொதுமன்னிப்பு காலக்கெடுவை ஏப்ரல் 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!
Next post சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்!!