அமெரிக்காவில் ஆணுக்கு குழந்தை பிறந்தது

Read Time:2 Minute, 5 Second

அமெரிக்காவில் ஓரிகன் மாகாணம் பென்ட் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் பீட்டி (வயது 34). இவர் பிறப்பால் ஒரு பெண். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார். ஆனால் கர்ப்பப்பையை நீக்கவில்லை. அவரை ஓரிகன் மாகாண அரசு, ஆணாக சட்டப்படி அங்கீகரித்தது. அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்சி (வயது 46) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நான்சி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை பெற்றவர் ஆவார். ஆனால் அதன்பிறகு அவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ள 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்தம்பதிக்கு ஆசை பிறந்தது. நான்சியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், ஆணாக மாறியிருந்த தாமசே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். அதனால் அதுவரை மாதம் இருமுறை போட்டு வந்த ஹார்மோன் ஊசியை நிறுத்தினார். அதையடுத்து அவருக்கு மீண்டும் மாதவிலக்கு வந்தது. மற்றொருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்களை, தாமஸின் கருமுட்டையில் செலுத்தி செயற்கை முறையில் கருவை உருவாக்கினர். இந்த கரு நன்கு வளர்ந்து ஓரிகனில் ஒரு ஆஸ்பத்திரியில் தாமசுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது பெண் குழந்தை ஆகும். `தந்தையும்’, சேயும் நலமாக உள்ளனர். ஆனால் தன்னால் தாய்ப்பால் புகட்ட முடியாதே என்பதுதான் தாமஸின் ஒரே மனக்குறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் அமைப்பிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பிரபாகரனும், பொட்டுவுமே காரணம் -கருணாஅம்மான்
Next post துபாயில் முகத்துக்கு நேரே நடுவிரலை காட்டினால் பொது இடங்களில் முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டாலோ, நாடு கடத்தப்படுவீர்கள்!!