இங்கிலாந்தில் கொடூர கொலை: 250 தடவை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 2 மாணவர்கள்

Read Time:1 Minute, 30 Second

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் லாரன்ட் பொனோமா, கேப்ரியல் பெரிஸ். 23 வயதான இவர்கள், பயோ என்ஜினீயரிங் மாணவர்கள் ஆவர். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் 3 மாத கால மரபணு ஆராய்ச்சி திட்டத்துக்காக அவர்கள் கடந்த மே மாதம் லண்டனுக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில், அங்கு யாரோ மர்ம ஆசாமியால் அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டிப் போடப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு உள்ளனர். 250 தடவை கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்த பிறகும், பலதடவை கத்திக்குத்து விழுந்துள்ளது. பிறகு, தடயங்களை மறைப்பதற்காக, அவர்கள் உடலுடன் சேர்த்து அந்த அறைக்கு தீவைத்து விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி உள்ளனர். இத்தகைய கொடூர கொலையை நாங்கள் பார்த்தது இல்லை என்று இதை விசாரித்து வரும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரி மிக் டுத்தி தெரிவித்தார். கொலைக்கான காரணமும் மர்மமாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபராக பதவி ஏற்றதும் ஈராக்கில் இருந்து படைகளை உடனே வாபஸ் பெறுவேன்: ஒபாமா மீண்டும் அறிவிப்பு
Next post காபூல் இந்தியத் தூதரகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல்; 40 பேர் பலி