அதிபராக பதவி ஏற்றதும் ஈராக்கில் இருந்து படைகளை உடனே வாபஸ் பெறுவேன்: ஒபாமா மீண்டும் அறிவிப்பு

Read Time:1 Minute, 26 Second

அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கொள்கை உடையவர். சமீபத்தில் இதை அவர் பகிரங்கமாக அறிவித்தபோது, குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே நிருபர்களை அழைத்த ஒபாமா, ஈராக் சென்று நிலைமையை ஆய்வு செய்த பிறகு, இதுபற்றி முடிவு செய்வேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் நிருபர்களை அழைத்த ஒபாமா, அவர்களிடம் கூறியதாவது:- ஈராக்கில் இருந்து படைகளை உடனடியாக வாபஸ் பெறுவது என்ற எனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நான் பதவி ஏற்ற முதல் நாளிலேயே, ஈராக் போரை முடித்துக் கொள்ளுமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன். இது ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவு. நான் கொள்கையை மாற்றி விட்டதாக எதிர்க்கட்சி பொய் பிரசாரம் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “அதிபராக பதவி ஏற்றதும் ஈராக்கில் இருந்து படைகளை உடனே வாபஸ் பெறுவேன்: ஒபாமா மீண்டும் அறிவிப்பு

  1. ரியாதிலிருந்து 'பரங்கிப்பேட்டை' காஜா நஜிமுதீன் says:

    ஈராக்கை ஒழித்தாகிவிட்ட பிறகு அமெரிக்க ராணுவத்துக்கு என்ன வேலையாம் அங்கே?! தமாஸ் பண்ணாதே ஒபாமா!

Leave a Reply

Previous post ஆசிய கோப்பை: இலங்கை அணி மீண்டும் சாம்பியன்
Next post இங்கிலாந்தில் கொடூர கொலை: 250 தடவை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 2 மாணவர்கள்