நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்!!

Read Time:2 Minute, 46 Second

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி. இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார்.

தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும், இவர் பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி எனும் படங்களிலும் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று (24) இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனது 54 ஆவது வயதில் அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடொன்றின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி!!
Next post கரவெட்டி பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்!!