பாகிஸ்தான் பிரதமர் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல்

Read Time:1 Minute, 59 Second

பாகிஸ்தான் பிரதமர் ரஸ யூசுப் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். சில தவிர்க்க முடியாத, முக்கிய அவசரமான கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உளவுத் துறை அளித்த எச்சரிக்கை தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில திட்டங்களை தொடங்கிவைத்தல், நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல் உள்பட கிலானியின் பல்வேறு திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, இஸ்லாமாபாதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்நகர மூத்த போலீஸ் உயர் அதிகாரி அகமது லத்தீப் தெரிவித்தார். எந்த ஒரு குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பிடமிருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை. இருப்பினும் சட்ட அமலாக்கத் துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு தொடக்கம் முதல் பாகிஸ்தானில் அடிக்கடி தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்து வருகிறது. இந்த தாக்குதல் அனைத்துக்கும் தாலிபான்கள்தான் காரணம் என, அந்த நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்த வெறி பிடித்த புலிகளை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும்! -ஆனந்த சங்கரி
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..