பதவிகளை இலக்கு வைத்து காவல்துறைமா அதிபர்கள் செயலாற்றுகின்றனர் -ஐ.தே.க குற்றச்சாட்டு

Read Time:2 Minute, 13 Second

பதவிகளை இலக்கு வைத்து காவல்துறை மா அதிபர்கள் கடமையாற்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காவல்துறை மா அதிபர் பதவிகளில் கடமையாற்றுவோர் ஓய்வு பெற்றதன் பின்னர் தூதுவராலய அல்லது ஆளுனர் பதவிகளை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு சார்பாக நடந்து கொள்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார் இதேவேளை பொதுமக்களுக்கு காவல்துறையினரால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு இணைப்பு குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கியுள்ளது ஐக்கிய தேசிய கட்சியின் மத்தியசெயற்குழுவினரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரதெரிவித்துள்ளார் கீழ் மாவட்டம் முதல் உயர் மாவட்டம் வரையிலான காவல் துறை அதிகாரிகள் உரியமுறையில் தமது கடமைகளை மேறn;காள்ள தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது தராதரம் பார்க்காது பாரபட்சமற்ற ரீதியில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சேவையாற்றுவதனை இதன்மூலம் உறுதிப்படுத்தமுடியும் என ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது மேலும் காவல்துறையினர் 34வருடம் சேவையாற்றியுள்ள புதிய பொலிஸ் மா அதிபரை வெள்ளைவான் கும்பல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக்குறிப்பிட்டுள்ளமை வேதனைக்குரிய விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்த 39 பொது மக்கள் படையினரிடம் தஞ்சம்!
Next post காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து: இந்திய மாணவருக்கு 16 ஆண்டு ஜெயில், 16 கசையடி -சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவு