காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு!!

Read Time:3 Minute, 46 Second

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்த மறுநாளே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா முரண்டு பிடிக்க தொடங்கி விட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் – கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அளித்த இறுதித் தீர்ப்பில் முற்றுப்புள்ளி வைத்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ல் அளித்த தீர்ப்பை திருத்தியது. அதில், தமிழகத்துக்கு நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா வழங்கி வந்த 192 டிஎம்சி காவிரி நீரில், 14.75 டிஎம்சியை உச்ச நீதிமன்றம் குறைத்தது. அதை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவும், இதர பயன்பாட்டுக்காகவும் ஒதுக்கியது.

மேலும், இந்த நீர் பங்கீட்டை கண்காணிப்பதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்கும்படி மத்திய அரசுக்கும் கெடு விதித்தது.
தண்ணீர் குறைக்கப்பட் டதால், தமிழக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை கர்நாடக விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர். இம்மாநில முதல்வர் சித்தராமையாவும் தீர்ப்பை வரவேற்றார். ‘காவிரித்தாய் கர்நாடகாவை காப்பாற்றி விட்டாள்’ என்று பெருமைப்பட்டார். அப்படி சொன்னவர், வழக்கம்போல் நேற்று பல்டி அடித்து விட்டார். பெங்களூருவில் நேற்று அவர் அளித்த பேட்டி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவின் உரிமையை வழக்கறிஞர்கள் உறுதியாக எடுத்துரைத்தனர். தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டத்தை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டதால் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை கர்நாடக அரசு வரவேற்கிறது. பொதுவாக, நதி நீர் பங்கீடு பிரச்னை ஏற்பட்டால் மேலாண்மை வாரியமோ அல்லது மேற்பார்வை கமிட்டியோ அமைக்கப்படும்.

அதுபோல்தான் காவிரி நீர் பிரச்னையிலும் உச்ச நீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், 6 வாரத்துக்குள் இந்த வாரியத்தை அமைக்கும்படி அது எந்தவித காலக்கெடுவும் விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி!!
Next post ‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’