காதல் திருமணம் பிடிக்காததால் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை! !
மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை தன் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு அதனை வெளியிட்டதாக மகளின் காதல் கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்தது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு கல்யாண்நகர் அருகே வசித்து வருபவர் ஜோஷி (வயது 27). இவர், ஆட்டோ டிரைவராகவும், மெக்கானிக்காவும் இருந்து வருகிறார். இவர் மீது பவர்லால் என்பவர் சைபர் கிரைம் பொலிஸில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-
“கல்லூரி மாணவியான என் மகளை ஜோஷி காதலித்து வந்துள்ளார். அவளுக்கு காதலர் தினத்தில் உள்ளாடைகளை பரிசளித்து அதனை அணிந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பும் படி ஜோஷி கூறி இருக்கிறார். அதன்படி என் மகள் அனுப்பிய வீடியோவை வைத்துக்கொண்டு 15 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.
அதனை தொடர்ந்து சைபர் கிரைம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கல்லூரி மாணவி ஜோஷி வீட்டில் இருப்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து ஜோஷியை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஜோஷி “15 லட்சம் கொடுக்காவிட்டால் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்று நான் மிரட்டவில்லை. நானும் கல்லூரி மாணவியான என் மனைவியும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம். அது பிடிக்காமல் அவளின் தந்தை பொய் புகார் கொடுத்து இருக்கிறார்.” என்று கூறினார்.
இது பொலிஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு புகார் கொடுத்த பவர்லாலை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது மகளின் ஆபாச வீடியோவை தந்தையே சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இது தந்தைக்கு பிடிக்கவில்லை. மகளை அவளது காதல் கணவனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளார். இந்த நேரத்தில் மகள் ஏற்கனவே தன் காதலனுக்கு அனுப்பி இருந்த ஆபாச வீடியோ பவர்லாலுக்கு கிடைத்தது. இதனை துருப்பு சீட்டாக பயன்படுத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த பழியை மகளின் காதல் கணவர் மீது போட முடிவு செய்து உள்ளார்.
தனது ஆபாச படத்தை கணவர்தான் வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிந்தால் மகள் அவனை பிரிந்து வந்துவிடுவாள் என்று கணக்குபோட்டார். அதன்படி மகள் என்றும் பாராமல் அவளது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து பவர்லாலிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளை காதல் கணவரிடம் இருந்து பிரிக்க அவளது ஆபாச படத்தை தந்தையே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating