டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் சிறுமி பலி!!

Read Time:1 Minute, 44 Second

நேற்றிரவு (15) 10.40 மணியளவில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் ஒன்று மோதியதில் வேனில் சென்ற சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் 99 ஆம் கட்டையில் வசித்துவரும் ஒன்றரை வயதான யூசுப் யனீயா என தெரியவந்துள்ளது.

99 ஆம் கட்டைப்பகுதியில் வசித்து வரும் காத்தான்குடியைச் சேர்ந்த ஹாரூன் (பலசரக்குக்கடை) தனது உறவினர்களை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த வேளை அவரது வேன் டயரில் காற்று போனதால் கட்டுப்பட்டை இழந்த வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் தாய் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!!
Next post இயக்குனர்களை கவர சனாகான் புது முயற்சி!!