ஹுவேய், ZTE நிறுவன போன்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா உளவு அமைப்புகள் எச்சரிக்கை!!

Read Time:1 Minute, 36 Second

ஹுவேய் மற்றும் ZTE நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை அமெரிக்க மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில் FBI, CIA மற்றும் , NSA உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி அறிக்கை ஒன்றை அளித்தனர்.

சீன உற்பத்தி நிறுவனங்களான ஹுவேய் மற்றும் ZTE நிறுவனங்களின் போன்கள் மூலம் அமெரிக்க மக்களின் ரகசியங்களை திருடுவதால் அமெரிக்க நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் புதியவை அல்ல, 2012-ம் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றிமாறன் வெளியிடும் படம்!!
Next post நடிகர் கதிர் திருமணம்!!