தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில்!

Read Time:2 Minute, 14 Second

கிழக்கில் தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டர் இப்போது கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, கிழக்கில் அருகம்குடாவில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் புலிகளின் தாக்குதலுக்குள்ளானதாக சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆனால் உண்மையில் நடந்தது இதுதான். பாலம் திறப்பு தொடர்பான தற்காலிக வேலைகளைக் கவனிப்பத்ற்காகச் சென்ற ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அவதானித்த விமானி அதனை பாதுகாப்பாக தரையிரக்கினார். அதன்பின்னர் ஹெலிகொப்டரைப் பரீட்சித்துப் பார்த்தபோது அதன் எரிபொருள் தாங்கியில் ஒரு துப்பாக்கி வேட்டுத் துளை ஒன்று காணப்பட்டது. இயந்திரக் கோளாறு உடனடியாகத் திருத்தப்பட்டு இப்போது அந்த ஹெலிகொப்டர் கட்டுநாயக்க வமானப் படைத்தளத்துக்கு கொண்டுவரப்பட்டு பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன!
Next post ஆறு மாத காலப்பகுதியில் புலிகளின் 228 சடலங்கள் படையினரால் கையளிப்பு!