சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

Read Time:3 Minute, 10 Second

Anandasangari.jpgவீரமக்கள் தினம்-2008.. 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ்வுன்னததினத்தில் விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த கழக கண்மணிகட்கும் சக விடுதலைப் போராளிகட்கும் பொதுமக்கட்கும் அஞ்சலி செலுத்தி தியாகம் செய்த செம்மல்களை நினைவு கூர்வோம்.

நிகழ்ச்சிநிரல்
– மலர்அஞ்சலி
– வினோத உடைப் போட்டி
– அறிவுத்திறன் போட்டி
– பின்னணி இசைக்கு ஆடுதல்
– பிரதம விருந்தினர்உரை மற்றும் தோழர்களின் உரை
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமவிருந்தினராக கலந்து கொள்ளும் இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.
– நாட்டிய நடனம்
– மாணவ மாணவியர் அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு (கடந்த 15.06.2008 நடைபெற்ற அறிவுப் போட்டிக்கானவை)
– நாடகம் – “நாடகப்புரவலர்“ வையாபுரியின் நெறியாள்கையில் “ஓவியம் வரையாத தூரிகை”
என்பனவும் சிறப்பம்சங்களாக இடம்பெறவுள்ளன.

காலம் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30 மணி
இடம்: Gemeindschaftszentrum Affoltern
Bodenacker 25, 8046 Zürich
(Oerliken இலிருந்து Bus 62 மூலம் இறுதித் தரிப்பிடம்)
தொடர்புகட்கு:- 076- 368 15 46, 079 – 624 90 04

மக்கள் விடுதலையை வென்றெடுக்கும் கழகத்தின் நேர்க்குறி கொண்ட கொள்கையில் நேர்ந்து விட்ட இன்னல்கட்கும் இடர்கட்கும் முகம் கொடுத்து மக்கள் விடுதலையை வென்றெடுக்க சகவிடுதலை விரும்பிகளுடனும் இலட்சியப் பாதையில் ஒன்றிணைவோம்.

*** ‘வெறி கொண்டல்ல, நேர்க்குறி கொண்டே வெல்வோம் – மக்கள் விடுதலையை”
*** ‘தன் தலைவிதியை தனது சொந்தக் கரங்களில் எடுக்காத எந்த சமூகமும் உருப்பட்டதாக வரலாறு இல்லை”

– மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும் புளொட் அமைப்பின் செயலதிபருமான தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்)

-புளொட் சர்வதேச ஒன்றியம்- 25.06.2008
தகவல் :– புளொட் சர்வதேச ஒன்றியம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொங்கோலியாவில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கு மிடையிலான மோதலில் 5 பேர் பலி
Next post கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகள் அதிரடி மீட்பு