எனக்கு ஸ்டார் அந்தஸ்தில் ஈடுபாடு கிடையாது : நடிகை நதியா சுளீர் !!

Read Time:3 Minute, 22 Second

பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நதியா. தேர்வு செய்தே படங்களில் நடித்துவந்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஒரு கட்டத்தில் நதியா சேலை, நதியா வளையல், நதியா கம்மல் என பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு அவரது பெயர் வைத்து விற்கப்பட்டது. கடந்த 1988ம் ஆண்டு ஷிர்ஷ் காட்போல் என்பவரை மணந்தார். சனம், ஜனா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தற்போது அம்மா, அக்கா, அண்ணி மற்றும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2016ம் ஆண்டு, ‘திரைக்கு வந்த கதை’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

2 வருட இடை வெளிக்கு பிறகு தற்போது மோகன்லால் நடிக்கும் நீராலி மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபற்றி நதியா கூறியது: நான் நடிக்க வந்து 34 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடன் நடிக்க வந்த நடிகைகள் இன்றைக்கு 200 அல்லது 300 படங்கள் நடித்துவிட்டனர். ஆனால் நான் 52 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் என் மனதுக்கு பிடித்த பாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்தேன். இப்போதும் அப்படித்தான் செய்கிறேன்.

நடிப்பு எனது ஆர்வமாக இருந்தாலும் குடும்பம், குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை தந்தேன். அந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க ஆசைப்பட்டேன். இன்றைக்கும் அப்படித்தான். எனது பிள்ளைகளுக்கு தர வேண்டிய தாய் பாசத்தை நான் முழுமையாக தந்திருக்கிறேன். தற்போது அவர்கள் வெளிநாட்டில் படிக்க சென் றிருக்கின்றனர். இந்த இடைவெளியில் நான் நடிக்க வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்லது முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமோ கிடையாது.

ஸ்டார் அந்தஸ்திலும் எனக்கு ஈடுபாடு கிடையாது. அது வரும் போகும். இன்னும் நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் அடிக்கடி என்னை நான் வெளிக்காட்ட விரும்புவதில்லை. ஏனென்றால் எனக்கு நானே பார்த்துக்கொண்டாலே போர் அடித்துவிடும். தற்போது மோகன் லாலுடன் ‘நீராலி’ மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ‘நா பேரு சூர்யா’ படங்களில் நடிக்கிறேன். இவ்வாறு நதியா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் !!
Next post உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியீடு: 12-வது இடத்தை பிடித்த மும்பை !!