குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய கண்ணாடி: சீன போலீஸ் அசத்தல்!!

Read Time:1 Minute, 47 Second

சீனாவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள செல்போன் போன்ற உபகரணத்திற்கு அனுப்புகிறது. அந்த உபகரணத்தில் ஏற்கனெவே போலீஸ் சேகரித்து வைத்துள்ள தரவுகளை வைத்து அவரது முகவரி என்ன? தற்போது அவர் தங்கி இருக்கும் இடம், சமீபத்தில் அவர் தங்கி இருந்த ஹோட்டல், பயன்படுத்திய இன்டர் நெட் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனை பயன்படுத்தி ஸெங்சவ் ரயில் நிலையத்தில் நான்கு போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளைப் பிடித்து வந்ததாக சீனாவின் தினசரி பத்திரிகை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதுவரையில் சந்தேகத்திற்குரிய ஏழு பேரையும், தவறான அடையாள அட்டை உபயோகப்படுத்திய 26 பேரையும் இந்தக் கண்ணாடியின் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்தக் கண்ணாடி தனிமனிதர்களின் அந்தரங்க உரிமையைப் பாதிக்கிறது என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியுடன் கமல் கூட்டணியா?
Next post பள பள அழகு தரும் பப்பாளி!!