ரஜினியுடன் கமல் கூட்டணியா?

Read Time:2 Minute, 11 Second

நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இருவருமே கட்சி உறுப்பினர்கள், கட்சி கூட்டங்கள் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினி கூறியிருந்தார்.

தற்போது கூட்டணி குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ரஜினியும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும். ரஜினியும் நானும் சேர்வது என்பது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. ரஜினியும் நானும் சேர்வது தேவையா? என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தது ரொம்பவே அதிகப்படியான தண்டனை. போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுக்காக அறிஞர்கள், விஞ்ஞானிகளை நாடப்போகிறேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சந்தேகத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்த்து வைக்கிறார். பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்!!
Next post குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய கண்ணாடி: சீன போலீஸ் அசத்தல்!!