இலஞ்சம் பெற்ற விவசாய ஆலோசகர் கைது

Read Time:1 Minute, 33 Second

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு விவசாய ஆலோசகர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதகம பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெதகம கமநல சேவை மத்திய நிலையத்தின் பொல்கஹபிடிய பிரிவின் விவசாய ஆலோசகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

அனுமதிபெற்ற காணி ஒன்றில் பலா மரம் இரண்டை வெட்டுவதற்காக அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதுடன் பின்னர் அத்தொகை 4,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதில் 2,000 ரூபாவை பெற்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதகம கமநல சேவைகள் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விவசாய ஆலோசகர் விசாரணைகளின் பின்னர் பிபில நீதவான் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தலில் போட்டியிட சமந்தா திட்டம்!!
Next post 40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்!!