அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேச்சு திறமை அடிப்படையில் குடியுரிமை!!

Read Time:4 Minute, 6 Second

‘திறமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்’’ என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் நேற்று உரையாற்றினார். அவருடைய பேச்சு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

* திறமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். அவர்கள் அமெரிக்காவை மதிக்கவும், நேசிப்பவர்களாகவும், நமது சமுதாயத்துக்கு செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
* குடியுரிமை சீர்திருத்தத்துக்கு நான்கு தூண்கள் அவசியம்.
* நமது திட்டத்தின் முதல் தூண் பெற்றோர்களால் சிறு வயதில் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

* அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதி முழுவதும் சுவர் எழுப்புவதுதான் இரண்டாவது தூண். நமது இந்த திட்டம் மூலம் குற்றவாளிகள், தீவிரவாதிகள் நமது நாட்டுக்குள் நுழைவது தடுக்கப்படும்.
* திறமை, தகுதி, அமெரிக்கர்களின் பாதுகாப்பு போன்றவை பற்றி கண்டுகொள்ளாமல் இஷ்டத்துக்கு விசா வழங்கும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும். இதுதான் மூன்றாவது தூண்.

* அமெரிக்காவில் குடியேறும் ஒரு நபர் மூலம் அவரது தூரத்து உறவினர்கள் பலர் கணக்கில்லாமல் குடியேறி விடுகின்றனர். நமது திட்டப்படி குடியேறும் நபரின் வாழ்க்கைத் துணை மற்றும் மைனர் குழந்தைகள் மட்டுமே நுழையும் வகையில் சீர்திருத்தம் அவசியம். இது நமது பொருளாதாரத்துக்கு மட்டும் அல்ல, நமது பாதுகாப்புக்கு, எதிர்காலத்துக்கும் முக்கியம். பழங்கால குடியேற்ற விதிமுறைகளை மாற்றி 21ம் நூற்றாண்டுக்கான குடியேற்ற விதிமுறைகளை கொண்டு வரும் நேரம் இது. இந்த 4 தூண்கள் மூலம் பாதுகாப்பான, நவீன, சட்ட ரீதியான குடியேற்ற முறையை கொண்டு வர முடியும்.

வடகொரியாவால் அச்சுறுத்தல்: வடகொரியா விவகாரம் பற்றி பேசிய அதிபர் டிரம்ப், ‘‘வடகொரியா பொறுப்பற்ற முறையில் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இது வெகு விரைவில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இதை தடுக்கும் வகையில் வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார். பலியான இந்தியரின் மனைவியும் பங்கேற்பு அமெரிக்க அதிபரின் நாடாளுமன்ற உரையை கேட்பதற்காக கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய இன்ஜினியர் சீனிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனயனா துமாலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமியாரை தடியால் அடித்து கொலை செய்த மருமகன்!!
Next post 2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!