சவுதியில் ரயில் பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவச பாஸ்

Read Time:1 Minute, 28 Second

சவுதியில் ரயிலில் பயணம் செய்த பெண் குழந்தைப் பெற்றெடுத்ததையடுத்து அந்நாட்டுப் அரசு அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பாஸ் வழங்கி கெளரவித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஆயிஷா பக்கிர் இப்ராஹிம். சவுதி அரசு ரயிலில் அல் ஹஸாவிலிருந்து ரியாத் நகருக்குப் சில தினங்களுக்கு முன் பயணம் செய்தார். அப்பேது திடீரென்று பிரசவ வலி கண்டு விடவே, வேறு வழியின்றி உடன் வந்த பெண்கள் உதவ ரயிலிலேயே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஆயிஷா. பின்னர் இத்தகவல் ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு விஷயத்தைத் தெரிவித்தனர். ரயிலிலேயே குழந்தைப் பெற்றெடுத்த அப்பெண்ணுக்கும் புதிதாய் பிறந்த பெண் குழந்தைக்கும் இனி ஆயுள் முழுக்க இலவசமாக சவுதி ரயில்களில் பயணிக்கும் சலுகை அட்டையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்
Next post காலி ஹிக்கடுவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டுபேர் பலி