பிரிட்டனுக்கான புதிய இலங்கையின் தூதுவராக நிஹால் ஜயசிங்க

Read Time:1 Minute, 39 Second

பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்கவை அரசு நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது சட்டத்துறையில் 37வருடங்களாக ஈடுபட்ட நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்க கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சட்டத்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். சட்டத்துறையில் பல உயர்பதவிகளை வகித்த இவர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளுள் ஒருவராக கடமையாற்றி உள்ளமை குறிப்பிடதக்கதாகும் பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவராக முன்னர் கடமையாற்றிய ரேனுகா செனவிரத்ன தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கடந்த 19ம் திகதி நாடு திரும்பியிருந்தார் இந்நிலையில் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் ஜயசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுழலும் கட்டடம் – துபாயில் இன்னொரு அதிசயம்!
Next post இலங்கையில் சண்டை: 47 விடுதலைப் புலிகள் பலி; பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை ராணுவம் கைப்பற்றியது