12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!!

Read Time:4 Minute, 27 Second

பூநகரி – நாச்சிக்குடா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று, பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (22) இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில், 12 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது உறவினரான குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பான சுருக்க முறையற்ற விசாரணை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நடாத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கு பாரப்படுத்தப்பட்டது. சந்தேகநபரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், பெற்றோரின் பாதுாகப்பிலிருந்து கடத்திச் சென்றமை மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்புணர்ந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிரி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகவும், மதுபோதையில் அவ்வாறு நடந்துகொண்டமைக்கு இப்போது அவர் வருத்தப்படுவதாகவும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

மேலும், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் அவர் கருணை விண்ணப்பம் செய்தார்.

எனினும், எதிரி தனது குற்றத்தை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடுனரான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிபதி இளஞ்செழியன் “எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது முதாவது குற்றமான பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து சிறுமியைக் கடத்திச் சென்றமைக்கு இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இரண்டாவது குற்றமான சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வழங் கவேண்டும். எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்!!
Next post நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை…!!