துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

Read Time:1 Minute, 23 Second

அங்காரா: துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியின் தென்கிழக்கில் உள்ள தியார்பகிர், மார்டின் போன்ற பகுதிகளில், அருகில் இருந்த பொருட்களைக் கூட கண்டறிய முடியாத நிலை காணப்பட்டது. மேலும் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. தெளிவான ஓடுதளம் தெரியாததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பகல் நேரத்தில் கூட இருள் சூழ்ந்தது போல் நகரம் முழுவதும் காட்சியளிக்கிறது. சிரியா எல்லைக்கு அருகே வானம் சிவப்பு நிறமாக காட்சி அளிப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை.
மேலும் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் இந்த புழுதிப் புயலால் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பால்!!
Next post 20 ஆண்டுகளை நிறைவு செய்த டைட்டானிக்!!