காமத்துப்பாலில் திருவள்ளுவர் கூறியிருக்கும் சூப்பர் காதல் டிப்ஸ்!!

Read Time:5 Minute, 36 Second

காமத்துப் பால் என்றதுமே அது கொஞ்சிக்குலாவி கட்டிலில் மகிழ்வதை பற்றியும், ஆண், பெண் புணர்தல் பற்றியது மட்டுமே என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், அதில் பெண்மை காதலின் அழகு, என காதலும், இல்லற பந்தமும் குறித்து திருவள்ளுவர் பெரிய கருத்துக்களை இரண்டே வரிகளை விவரித்துக் கூறியுள்ளார்.

காதல் என்பது என்ன? காதலி என்பவள் யார்? காதலின் அழகும், காதலியின் அழகும் எத்தைகையது? காதலானது எப்படி இருக்கிறது? அதன் அழகையும், சிறப்பையும் காமத்துப் பாலில் காதற்சிறப்புரைத்தல் அதிகார குறள்களில் திருவள்ளுவர் கூறியுள்ளவை.

இனி, காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்கள் மற்றும் அதற்கு கலைஞர், மு.வ மற்றும் சாலமன் பாப்பையா கூறியிருக்கும் விளக்க உரைகள் குறித்தும் காணலாம்….

குறள் 1121 : பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

மு.வரதராசனார் உரை: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.

குறள் 1122 : உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.

மு.வரதராசனார் உரை: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

சாலமன் பாப்பையா உரை: என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

குறள் 1123 : கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.

மு.வரதராசனார் உரை: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை: என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

குறள் 1124 : வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை: ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.
மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

சாலமன் பாப்பையா உரை: என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

குறள் 1125 : உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.

மு.வரதராசனார் உரை: போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!.

சாலமன் பாப்பையா உரை: ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எச் 1 பி விசாவில் மனைவிக்கும் அனுமதி டிரம்ப் நிர்வாகத்திடம் ஐடி நிறுவனங்கள் மனு!!
Next post முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்!!