மாதவிலக்கின்போது மார்பகங்கள் வலிப்பதேன்?

Read Time:5 Minute, 15 Second

மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும் மார்பகங்களில் வலி இருக்கும். மார்பகங்களில் வீக்கம், கனத்த உணர்வு, வலி போன்ற அந்த மாற்றங்களின் பின்னணி, தீர்வுகள், வாழ்க்கை முறை ஆலோசனைகள் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்(premenstrual syndrome) பிரச்னைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி
விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

எவை எல்லாம் சாதாரணமானவை?

* வீக்கம்

* மென்மையாதல்

* வலி

* எரிச்சல்

மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?

* கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.

* கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.

* மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.

* மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.

* உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

* மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்.

* மார்பகங்களிலிருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்.

* உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால். தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்.

* மாதவிலக்கு முடிந்தபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்.

* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்.

* மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.
வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்

* மார்பகங்களில் வலியோ, வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும்.

* மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் இ மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

* நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.

சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

* வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்

* பசலைக்கீரை

* ஆலிவ்

* சோளம்

* கேரட்

* வாழைப்பழம்

* பழுப்பரிசி

அவகேடோமருத்துவர் என்ன செய்வார்?

* உங்கள் மார்பகங்களைப்பரிசோதித்து, கட்டிகள் மற்றும் வீக்கத்தின் தன்மையைக் கண்டறிவார்.

* அந்த வலியும் வீக்கமும் மாதவிலக்குடன் தொடர்புடையவையா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்றும் சோதிப்பார்.

* சந்தேகப்படும்படியான கட்டிகளாக இருந்தால் மேற்கொண்டு தேவைப்படுகிற சோதனைகளுக்கு அறிவுறுத்துவார்.

* ஆபத்தில்லாத, வழக்கமான மாதவிலக்கு வலி என உறுதியானால் ஸ்டீராய்டு கலக்காத வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையை பார்த்து பயந்த ஆர்யா…!!
Next post இயற்கையாக கிடைக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!!