பாகிஸ்தான் பழங்குடிகள் 28 பேர் சுட்டுக் கொலை

Read Time:1 Minute, 33 Second

பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான அமைதிக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினர் 28 பேரை பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிட்டானி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள் பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு பல்வேறு பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கே அடிக்கடி மோதல்கள் நடைபெறும். தலிபான் தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். தாரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிட்டானி பழங்குடியினத்தைச் சேர்ந்த 30 பேரை இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றனர். அவர்களில் 28 பேரை செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்கள் அமைதிக் குழுவைச் சேர்ந்தவர்கள். கார்வாம் என்ற இடத்தில் உள்ள சந்தைப்பகுதியில் அவர்களது உடல்களை போட்டுவிட்டுச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அமைதிக் குழுவை சேர்ந்த மேலும் 12 பேர் கடந்த திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Tamil Civilians escaping terror held areas attacked by LTTE
Next post இந்த வார ராசிபலன் (27.06.08 முதல் 03.07.08 வரை)