ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு
ஜெர்மனியில் உள்ள நூரன்பெக் நகரில் தியாகிகள் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நடைபெற்றது. தோழர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் இந்தவைபவத்தில் கலந்துகொண்டனர். ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய இடங்களிலுருந்தும் தோழர்கள் வந்து கலந்துகொண்டதுடன் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி ஆகிய சக தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். இதுவரை காலமும் போராட்டத்தில் மரணித்த பொதுமக்கள், போராளிகள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக எமது மறைந்த பாசத்திற்குரிய செயலாளர் நாயகம் அவர்களின் உருவப்படத்திற்கு தோழர் ஞானம் அவர்கள் தீபம் ஏற்றி வைக்க அனைவரும் எழுந்து நின்று தமது அஞ்சலியை செலுத்தினர். ரிபிசி வானொலி தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒலிபரப்பிய வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜபெருமாள் அவர்களின் அஞ்சலி உரை ஒலிபரப்பப்பட்டது. தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டத்தினை நெறிப்படுத்தி நடாத்தினார். புளொட் அமைப்பின் சார்பில் தோழர் ஜெகநாதனும், தேனி இணையத்தள ஆசிரியர் தோழர் ஜெமினி, ரிபிசி, ரிஆர்ரி போன்ற வானொலிகளில் தனது அரசியல் கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்துவரும் சோலையூரான் போன்றோரும் இத் தியாகிகள் தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். கட்சியின் சார்பில் சுவிற்சர்லாந்திலிருந்து வந்து கலந்துகொண்ட தோழர் பாஸ்கரன், பிரான்சிலிருந்து வந்து கலந்துகொண்ட தோழர் கிருபன், கனடாவிலிருந்து வந்த தோழர் ஞானம், பிரித்தானியாவிலிருந்து வந்து கலந்து கொண்ட கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சாந்தன் ஆகியோரும் இவ் அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றினர்.
இதனையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளை தோழர் போல் தலைமை ஏற்று நெறிப்படுத்தி நடாத்தினார். “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்” என்ற பாரதியின் பாடலுக்கு சிறுமிகளான பிரியங்கா, துஷ்யந்தி, நீரோயா ஆகியோர் பரதநாட்டியம் ஆடினார்கள். அடுத்ததாக “கூடிவாருங்கடி கூடிவந்து கும்மி பாடுங்கடி” என்ற கிராமிய கும்மிப்பாடலுக்கு சிறுமிகளான ஜெலெக்ஸி, ரொசானி, அலெக்ஸி ஆகியோர் பங்கெடுத்துக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து தோழர் போல் அவர்கள் தலைமை ஏற்று “கவிதா நிகழ்வு” ஒன்றை நடாத்தினார். “நாபா மறுபடி நீ வருவாயா” என்னும் தலைப்பில் தோழர் கொல்வினும், “காலம் தந்த தலைவன்” என்னும் தலைப்பில் சாந்தி ரகுவும், ‘தோழர் கேதீசின் நினைவாக” என்னும் தலைப்பில் தோழர் பரமனின் கவிதையும் “விழிகளில் வடிவது கண்ணீர் துளிகளல்ல” என்னும் தலைப்பில் ஜெசிந்தா அலெக்ஸின் கவிதையும் “வாழ்வைக் கொடுத்தவன் நீ” என்னும் தலைப்பில் தோழர் போல் அவர்களும் கவிதைகளை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து வெண்மேகம் வட்டமிட்டதோ என்ற பாடலுக்கு சிறுமிகளான துஷ்யந்தி, பிரியங்கா, நிரோயா, சாமினி ஆகியோர் நடனமாடினர். இவற்றைத் தொடாந்து தோழர்கள் சோலையூரான், போல் ஆகியோர் சந்தி அரசியலை மையப்படுத்தி நிகழ்த்திக் காட்டிய “விடுப்பு” என்கின்ற நாடகம் சமகால நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இறுதியாக அங்கு வருகை தந்த பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் 13வது அரசியல் திருத்த சட்டம் தொடர்பாகவும் அதிலுள்ள சாதக பாதகங்கள், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் நிரந்தரத் தீர்வு போன்ற கருத்துக்களை மையப்படுத்தி அரசியல் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.
தியாகிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்ற மண்டபத்தில் சிறிய கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது. கட்சியின் வரலாற்றை வெளிக்கொணரும் வகையில் கட்சியின் கடந்தகால வெளியீடுகள் புகைப்படங்கள் மற்றம் பிரசுரங்கள் போன்றவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் இத்தியாகிகள் தின நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் ஆர்வத்துடனும், உறுதியுடனும் நிகழ்த்தி முடித்த நூறன்பேக் தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -சர்வதேச கிளைகளின் ஒன்றியம்
2 thoughts on “ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
These people are pests out the grass for race of tamil people.
EPDP Stupids are doing spy works for SLA and they daily killing srilanka tamil minarity.please dont do same.