குளிர்காலத்தில் இனி இருமல் இல்லை..!!
குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம்.
சளி தொந்தரவுக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். வலியையும் கட்டுப்படுத்தும். சளி பிரச்சினையில் இருந்தும் காக்கும்.
சளி, இருமலுக்கான ஆரம்ப அறிகுறி தென்பட்டுவிட்டால் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து பருகலாம்.
மார்பு சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வரலாம். அது மார்பு சளியை போக்க உதவும்.
குளிர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன் மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம்.
காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி சேர்த்து, அதனுடன் தேன் கலந்து பருகி வரலாம். அது தொண்டைக்கு இதமாக இருக்கும்.
ஏலக்காயை பொடித்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து பரிமாறலாம். அது குளிர்கால நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும். சோர்வான மனநிலையில் இருந்தும் மீளவைக்கும்.
இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகிவருவதன் மூலம் மார்பு சளிக்கு தீர்வு காணலாம்.
சாம்பார் வெங்காய சாறுடன், இஞ்சி சாறு, தேன் கலந்து பருகி வருவதும் சளி தொந்தரவை போக்கும்.
ஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக் காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது குளிர்கால நோய்களை தடுக்கும்.
குளிர் காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வருவது பல நோய் தொற்றுகளில் இருந்து உடல் நலனை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
பூண்டுவை சூப்பாகவோ, குழம்பில் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். அது சளி, இருமலை எளிதாக கட்டுப்படுத்திவிடும்.
More Stories
மூளைக்கு புத்துணர்ச்சி தரும் துளசி!! (மருத்துவம்)
துளசி ஒரு மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும்...
40+ வயதினருக்கு ஹார்ட் அட்டாக்…!! (மருத்துவம்)
ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக நேர்ந்த ஒரு நோய்க்குறியாக இருந்தது. இன்று அது...
வானவில் உணவுகள்!! (மருத்துவம்)
உணவு முறை மாற்றம்! மனித உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது இரண்டு மூன்று வேலைகளைச் செய்து கொண்டிருப்பவை. ஆனால், கல்லீரல் மட்டுமே ஏறக்குறைய...
மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! (மருத்துவம்)
நம்மைச் சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகளே பொதுவாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மன அழுத்தம் என்பது சிறியவர் முதல் பெரியவர் யாரை வேண்டுமானாலும்...
நலம் காக்கும் பருப்பு வகைகள்!! (மருத்துவம்)
வேர்க் கடலை வேர்க்கடலை பருப்பு வகையை சார்ந்தது. வேர்க்கடலை செடியின் கனியாக நிலத்திற்கு அடியில் வளரும். வேர்க்கடலை, ஒரு நீண்ட காலப் பயிராக விளைவிக்கப்படுகிறது. இதனை ஒரே...
சுவாசத்தை சீராக்கும் நொச்சி இலை! (மருத்துவம்)
பலருக்கும் தெரிவதில்லை. இவை கிராமங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தற்போது சிட்டிகளிலும் இந்த இலைகள் விற்கப்படுகின்றன. * இந்த இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி...
Average Rating